"இடதுசாரி, வலதுசாரி என எந்தப் பக்கம் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கவேண்டியது அவசியம்" – சாய் பல்லவி

மலையாளத் திரையுலகில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் சேர்ந்து நடித்த ‘விரத பர்வம் (Virata Parvam) என்னும் தெலுங்குப் படம் வரும் ஜூன் 17ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சாய்பல்லவி, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்தும் பசு கடத்தல் விவகாரம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

“நான் நடுநிலையான எண்ணவோட்டங்கள் கொண்ட குடும்ப சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதில் யார் சரி, யார் தவறு என்று என்னால் சொல்ல முடியவில்லை. அண்மையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்த்தேன். அதில் காஷ்மீரி பண்டிட்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பற்றிக் கூறினார்கள்.

சாய் பல்லவி

அதேசமயம் சமீபத்தில், பசுவை கொண்டுச் சென்ற நபர் ஒருவர், முஸ்லிம் என சந்தேகப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இங்கு நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷங்களை எழுப்பினார்கள். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம்?

என்னைப் பொறுத்தவரை எந்தச் சூழலிலும் வன்முறை என்பது தவறான அணுகுமுறை. இடதுசாரி, வலதுசாரி என எந்தப் பக்கம் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கவேண்டியது அவசியம். நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டியது அவசியம். நான் நடுநிலையாக இருக்கிறேன், அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டுவிட்டு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.