இந்தியாவிடம் இருந்து அதிகளவில் அரிசி வாங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்யும் மொத்த அரிசியில் சீனா மட்டும் 7.7% இறக்குமதி செய்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்தியா 212 டன் அரிசியினை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 16.34 லட்சம் டன் அரிசியினை சீனா இறக்குமதி செய்துள்ளது.
சீனா இறக்குமதி செய்த அரிசியில் 97% அல்லது 15.76 டன் அரிசியானது, உடைத்த அரிசியாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்
முன்னதாக இந்த உடைத்த அரிசியினை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிகளவில் இறக்குமதி இந்தியா செய்து வந்தது. ஆனால் தற்போது சீனா அதிகளவில் இறக்குமதி செய்து, இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக மாறியுள்ளது.
இது இந்தியா சீனா இடையேயான பல்வேறு பதற்றமான சூழ் நிலைகளுக்கு மத்தியிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பங்கு அதிகம்
2021 – 22ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதி – பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகள் என அனைத்தும் அடங்கும். இது மொத்தம் 212.10 டன்களாகும். இது கடந்த 2020 – 21ம் நிதியாண்டில் 177.79 டன்னாகவும் இருந்தது. இது 19.30 சதவீதம் அதிகமாகும். இந்த காலகட்டத்தில் சீனாவின் இற்க்குமதியானது 392.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 3.31 டன்னில் இருந்து 16.34 டன்னாக அதிகரித்துள்ளது.
சாதா அரிசி
இந்திய அரிசி ஏற்றுமதியில் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியானது முக்கியமான பங்கினை கொண்டுள்ளது. 2021 – 22. பாசுமதி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதியானது, 172.62 டன்னாகவும், 2020 – 21ம் ஆண்டில் 131.49 டன் அரியும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பாசுமதி அரிசி
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசுயின் மொத்த ஏற்றுமதியானது 2021 – 22ல் 39.48 டன்னாகும். இது கடந்த 2020 – 21ம் ஆண்டில் 46.30 டன்னாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அரிசி ஏற்றுமதியானது மிகப்பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடைத்த அரிசி
இந்தியா 2021 – 22ம் ஆண்டில் 38.64 டன் உடைத்த அரிசியினை 83 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 15.76 டன் சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020 – 21ம் ஆண்டில் 2.73 டன்னாகவும் இருந்த நிலையில், 476.40% அதிகரித்துள்ளது.
சீனாவின் தேவை அதிகம்
சீனாவில் உடைத்த அரிக்கான தேவையானது அதிகளவில் உள்ளது, அங்கு அரிசியில் செய்யப்படும் நூடுல்ஸ் மற்றும் ஓயின் தயாரிப்புக்கும் தேவை அதிகம் உள்ளது. ஆக சீனா நூடுல்ஸ் மற்றும் ஓயின் தயாரிக்க அதிகளவில் உடைத்த அரிசியினை வாங்குகிறது.
China has become a customer buying more broken rice in India
China has also become one of the largest buyers of rice from India. China alone accounts for 7.7% of India’s total rice exports.