இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் முதல் பாதிப்பு விலைவாசி உயர்வு, அதைத் தொடர்ந்து வந்தது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு. இவை இரண்டும் தான் விஸ்வரூபமாக வெடித்து மக்கள் புரட்சி வெடித்தது.
இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் மக்கள் பல மணிநேரம் காத்திருந்து எரிபொருளை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா பிரிட்டன் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கு முன்பாகவே இலங்கை போல் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி உருவாக உள்ளதாகத் தெரிகிறது.
10 வருட உச்சத்தில் இந்திய கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை உயர்வது எப்போது..?!
பெட்ரோல், டீசல் கட்டுப்பாடு
ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பம்புகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல்
பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் போன்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன மற்றும் மொத்த தேவையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே வழங்குவதால் எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ளது.
மக்கள் பீதி அடைய வேண்டாம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது ஒருபக்கம் வதந்தி எனக் கூறப்படும் நிலையில், இந்தியன் ஆயில் மார்கெட்டிங் பிரிவு தலைவர் வி.சதீஷ் குமார் கூறுகையில், நாட்டின் அனைத்து ரீடைல் விற்பனையகங்களிலும் போதுமான இருப்பும், சப்ளையும் உள்ளது எனவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் டிவீட் செய்துள்ளார்.
ராஜஸ்தான்
ஜெய்ப்பூரில் உள்ள 100 பெட்ரோல் பம்புகள் உட்பட ராஜஸ்தான் முழுவதும் சுமார் 2,000 பெட்ரோல் பம்புகள் பெட்ரோல், டீசல் இல்லாமல் பூட்டப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான் பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் சுனித் பாகாய்த் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களின் பெட்ரோல் பம்புகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மூடப்பட்டதே இந்தப் பற்றாக்குறைக்கு முதல் முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
3 நிறுவனங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனம் தனது சப்ளை அளவில் எவ்விதமான குறைப்பையும் செய்யாமல் இருக்கும் நிலையில் பார்த் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சப்ளை அளவை குறைத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆந்திரா பிரதேசம்
ராஜஸ்தான் போலவே ஆந்திரா பிரதேச மாநிலமும் அதிகப்படியான பெட்ரோல், டீசல் பற்றாக்குறை சந்திப்பதாகத் தெரிகிறது. உங்க ஊரில் எப்படி இருக்கு நிலவரம்..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க…
Is India facing Petrol, diesel shortage like Sri Lanka: fuel shortage crisis in India
Is India facing Petrol, diesel shortage like Sri Lanka: fuel shortage crisis இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. இலங்கை சாயல் இப்பவே தெரிகிறதா..? உண்மை என்ன..?