பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்திய அரசு உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதும் பெண்களின் தனிப்பட்ட பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் லிங்க்ட்இன் சமூக வலைதளம் ஐநாவின் பெண் அமைப்புடன் இணைந்து இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சாமானியர்களின் சுமை இன்னும் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஷாக்..!
லிங்க்ட்இன்
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றான லிங்க்ட்இன், பெண்களின் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்ற ஐநா பெண்கள் அமைப்புடன் இணைந்து 3.88 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி முதல்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2000 பெண்களுக்கு டிஜிட்டல் வேலைவாய்ப்பு திறனை வளர்ப்பதற்காக ஒரு குழுவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைவாய்ப்பு
இந்த குழுவின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சிகள், வழிகாட்டுதல் மற்றும் நெட்வொர்க்குகள் மூலம் பலவிதமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் திறமை
பெண்களுக்கு டிஜிட்டல் முறையில் அவர்களின் திறமையை அதிகரித்து அவர்களின் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கி, பெண்களை பொருளாதாரத்தில் முன்னேற முழு அளவில் தயார்படுத்த இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பெண்களின் வேலை வாய்ப்பு
பெண்களின் வேலை வாய்ப்பு என்ற சிறந்த அம்சத்திற்காக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பெண்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஐநாவின் பெண் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று இந்திய நாட்டின் லிங்க்ட்இன் மேலாளர் அசுதோஷ் குப்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாலின சமத்துவம்
சமூகத்தில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகார பகிர்தலை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல் பணி தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் பொருளாதார மேம்பாட்டில் ஐ.நாவின் பெண் அமைப்பை கூட்டணியாக சேர்த்து பாடுபடுவோம் என்றும் இந்த கூட்டணி மூலம் பெண்கள் மத்தியில் பல பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி ஆண்களுக்கு பரந்த அளவில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பெண்களுக்கும் ஏற்படுத்த ஈடுபடுவோம் என்றும் அவர் கூறி உள்ளார்.
சுயதொழில்
ஐநாவின் பெண் அமைப்புடன் கைகோர்த்து, இளம்பெண்களுக்கு தொழில் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் வேலை வாய்ப்பு வசதிகளை உருவாக்குவது மட்டுமின்றி சுயதொழில் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வி
பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கு தரமான கல்வி முக்கியம் என்பதால் சிறந்த கல்வியை பெண்களுக்கு அளிக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றும் ஐநா பெண்கள் அமைப்பின் இந்திய பிரதிநிதி சூசன் பெர்குசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆண்-பெண் வேலைவாய்ப்பு
நாட்டில் விகிதாச்சார எண்ணிக்கையில் ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்றும் ஆசிய நாடுகளை பொருத்தவரை 54% ஆண்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் நிலையில் பெண்களுக்கு 41 சதவீத வேலைவாய்ப்பு மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைவெளி குறைப்பு
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பின் தாக்கம் இன்னும் குறைந்தது என்றும் ஆண் – பெண் வேலை வாய்ப்பு இடைவெளியை குறைக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
LinkedIn, UN Women join hands to create employment opportunities for women
LinkedIn, UN Women join hands to create employment opportunities for women | இந்திய பெண்களுக்கு இனி ஈஸியா வேலை கிடைக்கும்: ஐநா-லிங்க்ட்இன் புதிய திட்டம்