இனி டோல் கட்டணத்தை கணக்கிடுவது ரொபம் ஈசி.. சுந்தர் பிச்சை கொண்டு வந்த சூப்பர் சேவை..!

ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் ஒரு நாளில் கூகுள் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த முடியாமல் முழுமையாக இயங்கி முடியாத அளவிற்கு பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் முக்கிய சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய சேவையை கொண்டு அறிமுகம் செய்துள்ளது சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள்.

சீனியர் சிட்டிசன்களுக்கு அள்ளி கொடுக்கும் ஐடிபிஐ வங்கி: இன்று முதல் புதிய வட்டி விகிதம்!

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்குள்ளது, இப்புதிய சேவையில் வெளி மாநிலங்கள் அல்லது வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போது இருக்கும் டோல்களில் செலுத்த வேண்டிய கட்டணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு மக்களுக்கு அளிக்கிறது.

டோல் கட்டணங்கள்

டோல் கட்டணங்கள்

உதாராணமாக சேலத்தில் இருந்து பெங்களூர் வர வேண்டும் என்றால் ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் (பெங்களூர் எல்லையில் இருக்கும் அத்திபள்ளி) என 4 இடத்தில் டோல் கட்டணங்களை செலுத்த வேண்டும். இந்நிலையில் இக்கட்டணம் எவ்வளவு என்பதை சேலத்தில் இருந்து பயணத்தை துவங்குவதற்கு முன்பாக தெரிந்துக்கொள்ள முடியும்.

கூகுள்
 

கூகுள்

இப்புதிய சேவை கூகுள் மேப்ஸ் செயலியில் இணைப்பு சேவையாக அளித்துள்ளது கூகுள். இந்த சேவை ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளிலும் அளிக்கப்படுகிறது. இதேபோலே இந்த சேவை புதியது இல்லை அமெரிக்காவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஒன்று தான்.

4 நாடுகள்

4 நாடுகள்

கூகுள் நிறுவனம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் 2000க்கும் அதிகமான டோல்களின் கட்டண தரவுகளை சேகரித்து இச்சேவையை அளிக்கிறது. விரைவில் உலகின் பிற நாடுகளிலும் அளிக்க உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியா

இந்தியா

கூகுள் நிறுவனம் இந்த டோல் கட்டண விபரங்கள் முதல்கட்டமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே அளித்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விரைவில் இச்சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

எப்படி..?

எப்படி..?

கூகுல் பேம்ப்ஸ்-ல் வழக்கம் போல் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்து Directions என்பதை கிளிக் செய்யுங்கள்.

Directions என்பதை கிளிக் செய்த உடனே எவ்வளவு மணிநேரத்தில் செல்ல முடியும், எவ்வளவு கிலோமீட்டர் தொலை என்பதன் விபரம் இருக்கும்.

இதனுடன் 3வதாக ஒரு வட்டத்திற்குள் 1,2,3 என தத்தம் வழித்தடத்தில் இருக்கும் டோல் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு இருக்கும்

அந்த வட்டத்தை கிளிக் செய்தால் போதும் எவ்வளவு கட்டணம் செலுத்த செலுத்த வேண்டும் என்பதை காட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Google Maps tells you toll cost on your route; How to check toll cost in google maps

Google Maps tells you toll cost on your route; How to check toll cost in google maps இனி டோல் கட்டணத்தை கணக்கிடுவது ரொபம் ஈசி.. சுந்தர் பிச்சை கொண்டு வந்த சூப்பர் சேவை..!

Story first published: Wednesday, June 15, 2022, 15:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.