இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன இணைத்தளம் மற்றும் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு விநியோகம்
இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களைத் தவிர ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.