அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து வெளிப்படையாக விவாதம் வெடித்துள்ள்தால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு பற்றத் தொடங்கியுள்ளது. அதிமுக விவகாரம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீணியாகி இருக்கிறது.
அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் நமது மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். மீம்ஸ்கள் ஆளும் கட்சிக்காரர் பதிவிட்டாலும் சரி, எதிர்க்கட்சிக்காரர் பதிவிட்டாலும் சரி, நடுநிலையாளர்கள் பதிவிட்டாலும் சரி, நாகரிகமான மொழியில் இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த மீம்ஸ் கட்சி பேதங்களைத் தாண்டி கவனத்தைப் பெறும். இன்று சமூக ஊடகங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
அதிமுகவுக்கு ஓ.பி.எஸ் தலைமையேற்க தொண்டர்கள் போஸ்டர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமையேற்க வரக் கோரி பல இடங்களில் போஸ்டர்கள், சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் ஓ.பி.எஸ்.சை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்ற செய்தி குறித்து, திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள மீம்ஸில், பாண்டு செட் மற்றும் பறை இசைக் குழுவினருக்கு இடையே சண்டை மூட்டி விடும் வடிவேலு மீம்ஸ் பதிவிட்டு, “இப்படியே பேசிட்டே இருந்தா எப்படி, யார் பெரிய ஆள்ணு கட்சியை பிரிச்சு காட்டுங்க…” என்று கிண்டல் செய்துள்ளார்.
அதானிக்கு 500 மெகாவாட் மின் திட்டத்தை வழங்க பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார சபை அதிகாரி கூறினார். பின்னர், அதை வாபஸ் பெற்றார். ஆனாலு, அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “பிரதமர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தார் மாமா…
௭துக்கு மாப்ள கச்சத்தீவ மீட்கவா?
இ்ல்ல மாமா அதானிக்கு 500 MW ஆர்டர் புடிக்க மாமா..” என்று கிண்டல் செய்துள்ளார்.
செஸ் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் சிறப்பாக ஓடி பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து, கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், “ஓட்டப்பந்தயத்தில ஓடி பதக்கம் வெல்றது சாதனை இல்லடா.. செஸ் போட்டியில ஓடி பதக்கம் வாங்குறது தான்டா சாதனை…” என்று அண்ணாமலையை கிண்டல் செய்துள்ளார்.
மோகன்ராம்.கோ என்ற ட்விட்டர் பயனர், “8 ஆண்டுகளில் 45 கோடி வங்கி கணக்குகள் – அண்ணாமலை பெருமிதம் என்ற செய்தியைக் குறிப்பிட்டு, எவ்வளவு நேக்கா மினிமம் பேலன்ஸ் இல்லைனு பணத்தை எடுத்து இருக்கீங்க” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
Msd இதயவன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதிமுக கட்சி அல்ல, கம்பெனி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதற்கு, அதான அந்த கம்பெனில டோக்கன் காண்ட்ராக்ட் உங்களுக்கு இல்லை னு ஆகிருச்சே?!” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா யாருங்க எனக்கு தெரியாது என்று கூறியதற்கு, கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஆமா சசிகலா யாரு? ஜெயலலிதாவோட வைய்பா?” என்று கேட்டு மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு இடையே, கணவரை கொலை செய்வது எப்படி என்று புத்தகம் எழுதிய பெண் எழுத்தாளர், கணவரை கொலை செய்த சம்பவம் குறித்து கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்ற ட்விட்டர் பயனர், “ஏன் பாட்டி, இப்படி பண்ணிட்டியே உனக்கு பாவமா இல்லையா ?
இருந்துச்சு..
எப்போ?
புக் நல்லா இருக்கு பார்ட்-2 எப்ப எழுதுவேன்னு கேட்டாரு, அப்போ..” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
அருள்ராஜ்அருண் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அவரு என்னன்னா 10 லட்சம் பேருக்கு வேலை தரேன்னு சொல்லுராரு
இங்க என்னன்னா ஒற்றை தலைமை வேனுமுன்னு சொல்றாங்க
அடுத்த தேர்தல் சம்பவம் நிறைய இருக்கும் போலேயே” என்று இன்றைய அரசியல் நிகழ்வுகலை மீம்ஸ் மூலம் கமெண்ட் அடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“