எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் போகலாம்! வெளியானது அறிவிப்பு


எதிர்வரும் நாட்களில் சந்தையில் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி மற்றும் அரிசி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், காய்ந்த மிளகாய், கடலை, நெல்  தட்டுப்பாடு ஏற்படலாம் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் போகலாம்! வெளியானது அறிவிப்பு

மட்டுப்படுத்தப்பட்டுள்ள விநியோகம் 

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதியில் பயன்படுத்தப்படும் திறந்த கணக்கீட்டு முறையை மே 06 ஆம் திகதி முதல் இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

திறந்த கணக்கீட்டு முறை இல்லாதொழிக்கப்பட்டதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் போகலாம்! வெளியானது அறிவிப்பு

அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த அளவில் சந்தையில் விற்பனை செய்ய கடை உரிமையாளர்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை  சதொச வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், போதியளவு பொருட்கள் கிடைக்கவில்லை என நுகர்வோர் விசனம்  வெளியிட்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.