பங்கு சந்தையில் கடந்த சில தினங்களாகவே நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், முதலீட்டாளர்கள் தற்போதைக்கு பங்கு சந்தை பக்கமே போக வேண்டாம் என ஒதுங்கி நிற்கும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளன.
இன்றும் அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற சூழலில், சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தொடர்ந்து அன்னிய முதலீடானது வெளியேறி வரும் நிலையில், இது சந்தையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தி வருகின்றது. அதெல்லாம் சரி இந்த இக்கட்டான நிலையில் எல் ஐ சி வாங்கி வைத்துள்ள சில போர்ட்போலியோ பங்குகள் குறித்த அறிக்கையானது வெளியாகியுள்ளது. அது என்னென்ன பங்குகள்? வாருங்கள் பார்க்கலாம்.
ரெசிஷனுக்கு பயப்படாத இந்திய ஐடி நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
என்னென்ன பங்குகள்?
இந்திய பங்கு சந்தையில் சிறந்த உள்நாட்டு முதலீட்டாளரான எல்ஐசி, சில பங்குகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான கேப்ரி குளோபல் கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரித்துள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 1,83,10,233 பங்கில் இருந்து, 2,24,91,571 ஈக்விட்டி பங்குகளாக அதிகரித்துள்ளது. இது 9.163%ல் இருந்து, 11.256% ஆக அதிகரித்துள்ளது. இதன் சராசரி விலை விகிதம் 3050.14 ரூபாயாகும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
எல்ஐசி-யின் மற்றொரு ஹோல்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தில், 11,73,80,500 பங்குகளில் இருந்து, 11,76,90,500 பங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 4.995%ல் இருந்து, 5.008% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் சராசரி விலை 2206.93 ரூபாயாகும். எஃப் எம் சி ஜி நிறுவனமான இது, ஹோம் கேர், பர்சனல் கேர், பியூட்டி கேர் , உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றது.
கேப்ரி குளோபல் கேப்பிட்டல்
வங்கி அல்லாத நிதி நிறுவனமான கேப்ரி குளோபல் கேப்பிட்டல் நிறுவனத்தின் 88,58,348 பங்களில் இருந்து, 1,24,00,000 பங்குகளாக அதிக்ரிக்கப்பட்டுள்ளது. இது 5.043%ள் இருந்து, 7.059% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் சராசரி விலை 624.61 ரூபாயாகும்.
இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது என் எஸ் இ-ல் 2565 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எல்ஐசி வாங்கிய சராசரி விலை 3050.14 ரூபாயாகும்.
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் பங்கு விலையானது 1.54% குறைந்து, 2137.50 ரூபாயாகும். எல்ஐசி வாங்கிய சராசரி விலை 2,206.93 ரூபாயாகும்.
கேப்ரி குளோபல் கேப்பிட்டல் பங்கு விலையானது 1.63% அதிகரித்து, 703.20 ரூபாயாகும். இதில் எல்ஐசி வாங்கிய சராசரி விலை 624.61 ரூபாயாகும்.
LIC increases holdings in these 3 stocks: What stocks are on the list? Is it on the rise?
LIC has increased its stake in companies including Hindustan Unilever, Hero MotoCorp and Capri Global Capital. Some of these stocks have seen a sharp decline from the purchase price.