உக்ரைனின் செவிரோடோனெட்ஸ்க் நகருக்கு செல்லக்கூடிய அனைத்து பாலங்களையும் ரஷ்ய படைகள் தூள் தூளாக்கி தகர்த்தெறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதை பிரதான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியார்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகள் எளிதில் ரஷ்ய படைகள் வசம் சென்றுவிட்டன.
இருக்கும் ஒரு சில பகுதிகளையும் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துவிட்டால் டான்பாஸ் பிராந்தியம் முழுவதும் ரஷ்யாவுக்கு சொந்தமாகிவிடும்.
இந்த நிலையில் செவிரோடோனெட்ஸ்க் நகருக்கு செல்லக்கூடிய அனைத்து பாலங்களை ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டன.
இதனால் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் துருப்புக்களை வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது சாத்தியமற்றதாகி உள்ளது.
இதனிடையில் போர் தொடங்குவதற்கு முன்னர் 1 லட்சம் பேர் வாழ்ந்து வந்த செவிரோடோனெட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்