ஐடி துறைக்கு காத்திருக்கும் சவாலான காலம்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..!

ஐடி துறையில் சமீபத்திய காலாண்டுகளாக அட்ரிஷன் விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், இது அடுத்த காலாண்டின் தொடக்கத்திலும் உச்சத்தினை எட்டலாம் என எதிபார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஐடி துறையில் சமீப காலாண்டுகளாகவே அட்ரிஷன் விகிதமானது, மிக மோசமான அளவினை எட்டியுள்ள நிலையில். இது இனி வரவிருக்கும் காலாண்டிலும் எதிரொலிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட்ராமன் நாரயணன் என்ன கூறியுள்ளார் வாருங்கள் பார்க்கலாம்.

அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கலாம்

அட்ரிஷன் விகிதம் குறித்து பேசியுள்ள நாரயணன், ஒட்டுமொத்த ஐடி துறையிலும் அதிகரித்து வரும் அட்ரிஷன் விகிதம், வரும் காலாண்டு தொடக்கத்திலும் அதிகரிக்கலாம். எனினும் அதன் பின்னர் சரிவினைக் காணலாம் என கூறியுள்ளார்.

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் அட்ரிஷன் விகிதம்

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் அட்ரிஷன் விகிதம்

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 2021ம் நிதியாண்டில் 12.1 சதவீதமாக இருந்தது. இது 2022ல் இரண்டாவது காலாண்டில் 17.8 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 21.1 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 22.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

அட்ரிஷன் விகிதம் உச்சம்
 

அட்ரிஷன் விகிதம் உச்சம்

உண்மையில் 2022ம் நிதியாண்டில் ஒட்டிமொத்த தொழில் நுட்பத் துறையிலும் அட்ரிஷன் விகிதமானது அதிகரித்தது. ஏனெனில் ஸ்டார்ட் அப்கள் தொழில்நுட்பத் திறமையை வளர்த்து, உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்குவதால், ஊழியர்களை தற்போது வகிக்கும் வேலையை விட வேறு வேலை வாங்க தூண்டியது. இதன் காரணமாக அட்ரிஷன் விகிதமானது உச்சம் தொட்டுள்ளது.

ஐடி துறையின் வளர்ச்சி

ஐடி துறையின் வளர்ச்சி

பல துறையிலும் டிஜிட்டல் வளர்ச்சி உட்புகுந்து வரும் நிலையில், இன்னும் தேவை அதிகம் உள்ளது. ஐடி துறையில் ஆண்டுக்கு 11 – 14% வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறையின் வருவாய் 2026ம் நிதியாண்டில் 350 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என நாஸ்காம் என சமீபத்திய அறிக்கையில் கணித்துள்ளது. ஆக எதிர்காலத்தில் ஐடி துறையில் தேவையானது அதிகரிக்கவே செய்யும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

நிறுவனத்தின் வருவாய்

நிறுவனத்தின் வருவாய்

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர வருமானம் 44.5% அதிகரித்து, 52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் 39% அதிகரித்துள்ளது. நிறுவனம் டிஜிட்டல் பிசினஸ் சர்வீசஸ், புராடக்ட் இன்ஜினியரிங், உள்ளகட்டமைப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு சேவை என பல வகையிலும் வணிகத்தினை திறம்பட செய்து வருகின்றது.

சவால் இது தான்

சவால் இது தான்

ஐடி துறையில் தேவையும் அதிகரித்து வரும் சூழலில் ஊழியர்கள் வெளியேற்றம் என்பது, நிறுவனங்களுக்கு பெருன் சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக திறமைக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது.

ஆக எங்களது பணியமர்த்தல் பேட்டர்ன் என்பது மாறியுள்ளது. எங்களின் தேவைக்கு ஏற்ப நாங்கள் பணியமர்த்தி வருகின்றோம். தேவையான பயிற்சிகளை கொடுத்த பிறகே பணியில் அமர்த்திக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Attrition rate may jump hike in next quarter: Happiest minds technology

Addition rates in the IT sector are expected to peak at the beginning of next quarter as of recent quarters.

Story first published: Wednesday, June 15, 2022, 22:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.