புதுடில்லி-‘ராணுவத்தின் ‘அக்னிபத்’ திட்டத்தில் தேர்வாகும் ‘அக்னி வீரர்’களுக்கு நான்கு ஆண்டுக்குப் பின், மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் துப்பாக்கி படை ஆகிய துணை ராணுவ படைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
.இளைஞர்கள் ராணுவத்தில் சேர, அக்னிபத் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள், ‘அக்னி வீரர்’கள் என்று அழைக்கப்படுவர். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ௫௦ ஆயிரம் வீரர் கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள், ‘ஆபீசர்’ பதவிக்கு கீழ் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுவர்.
இவர்களுக்கு, ஆறு மாத காலம் பயிற்சிஅளிக்கப்படும். பயிற்சிக்குப் பின், இவர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில், மூன்றரை ஆண்டு காலம் பணியில் இருப்பர். ‘நான்கு ஆண்டுகால பணிக்கு பின், ௨௫ சதவீதம் பேருக்கு ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும்’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்துக்கான, பிரதமர் மோடியின் தொலை நோக்கு திட்டம் தான் அக்னிபத். இத்திட்டத்துக்கு பல தரப்பிலும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, நான்கு ஆண்டு கால பணிக்குப் பின், மத்திய ஆயுதபோலீஸ் படை, அசாம் துப்பாக்கி படை போன்ற துணை ராணுவ படைகளில் பணியாற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இ
ந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., ஆளும் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் போலீஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
கமாண்டர்கள் வரவேற்பு
அக்னிபத் திட்டம் பற்றி ராணுவத்தின் வடக்குப் பிரிவு கமாண்டர் உபேந்திர திவேதி கூறியதாவது:இத்திட்டத்தால், நாடு முழுதும் உள்ள இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், அக்னி வீரர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களாக மாறியிருப்பர். இது சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.விமானப்படையின் மேற்கு பிரிவு தலைமை கமாண்டர் ஸ்ரீகுமார் பிரபாகரன் கூறியதாவது:இத்திட்டத்தின் கீழ் சேரும் ஜம்மு – காஷ்மீர் இளைஞர்கள், நான்கு ஆண்டுக்குப் பின், தேசபக்தியுள்ளவர்களாக, சிறந்த குடிமகன்களாக மாறியிருப்பர் என்பது நிச்சயம். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வதை, அக்னிபத் திட்டம் தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.