சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கமலின் விக்ரம் படத்தில் இருந்து நீ்க்கப்பட்ட காட்சிகளை மைனா நந்தினி தனது யூடியூப் சேனலில்வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமலஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை மாநகரம், கைதி மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவரும், கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
வழக்கமான பழிவாங்கல் கதையை வித்தியாசமான கோணத்தில் தான் ஏற்கனவே எடுத்த கைதி படம் மற்றும் கமல் நடிப்பில் 1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் லோகேஷ். மேலும் நடிகர் சூர்யா க்ளைமேக்ஸில் கொடுத்த என்ட்ரி அனைவரையும் மிரள வைத்தது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரித்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டார்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் படம் உலகளவில் 300 கோடிக்குமேல் கலக்ஷென் செய்து இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந் படத்தின் வெற்றியை முழுதாக கொண்டாடும் வகையில, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு கார், படத்தின் இணை இயக்குநர்கள் 13 பேருக்கு பைக், மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என கிஃப்ட் கொடுத்து அசத்தி வருகிறார் கமல்.
இந்நிலையில், படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவதாக நடித்த மைனா நந்தினி, தான் நடித்து விக்ரம் படத்தில் இடம்பெறாத காட்சிகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விக்ரம் படத்தில் நான், விஜய் சேதுபதி விஜய் சாருடன் நடித்த சில காட்சிகள் டெலிட் ஆகி இருக்கிறது. நான் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருப்பேன். விஜய் சேதுபதி கேட்டிருப்பார். ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கொடுக்கணும் அவ்வளவு கொடுக்கணும் என்ற சொல்லி கொண்டு இருக்கும் போது சிவானி வருவார். இந்த மூன்றாவதுக்கு பத்து லட்சம் என்று சொல்லுவேன். அந்த காட்சியை நீக்கி விட்டார்கள்.
அதேபோல் கப்பலில் ஒரு ட்ரமுக்குள் ஒருவரை கொன்று விஜய் சேதுபதி சார் போட்டு வைத்து இருப்பார். அப்போது நான் அவருக்காக மீன் வறுத்து கொண்டு இருப்பேன். அவரைக் கொன்று விட்டு உடனே விஜய் சேதுபதி சார் என் பக்கத்தில் உட்கார்ந்து ரொமான்ஸாக மீன் சாப்பிடுவார். அந்தக் காட்சியும் டெலிட் செய்து இருந்தார்கள். இருந்தாலும் விஜய் சேதுபதி, சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஆனால் கமல், பகத் பாசில் சாரை எனனால் பார்க்க முடியவில்லை என்று கூறிப்பிட்டுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil