குடியரசுத் தலைவர் தேர்தல்: பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து  டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.