குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து வேட்புமனு தாக்கல் முறைப்படி தொடங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஜூன் 29 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாள் ஜூலை 2 ஆகும்.
போட்டி இருந்தால் ஜூலை 18ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நடைபெற்றால் ஜூலை 21ஆம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.