குரங்கம்மை வைரஸின் பெயரை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்!


விஞ்ஞானிகளால் எழுப்பப்பட்ட கவலைகளுக்குப் பிறகு குரங்கம்மை வைரஸின் பெயரை உலக சுகாதார நிறுவனம் மாற்றவுள்ளது.

ஏறக்குறைய 30 நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை (Monkeypox) பெயரை மறுபெயரிட உலக சுகாதார நிறுவனம் (WHO) முடிவு செய்துள்ளது. வைரஸின் பெயர் பாகுபாடு காட்டும் வகையில் இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு எழுப்பிய கவலைகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 1,600-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்புகள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன.

Monkeypox வைரஸின் புதிய பெயர் குறித்த அறிவிப்புகளை WHO விரைவில் வெளியிடும் என்று நிருவத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குப்பைத்தொட்டிக்குள் கிடந்த எட்டு மாத கர்ப்பிணியின் தலை: ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி 

குரங்கம்மை வைரஸின் பெயரை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்!

ஜூன் 10-ஆம் திகதி வெளியிடப்பட்ட “குரங்கம்மை வைரஸுக்கு பாரபட்சமற்ற மற்றும் களங்கமற்ற பெயரிடல் அவசரத் தேவை” என்ற கட்டுரை, பெயரை மாற்ற 30 சர்வதேச விஞ்ஞானிகளிடமிருந்து கோரிக்கையை முன்வைத்தது.

புவியியல் பகுதிகள் மற்றும் விலங்குகளின் பெயர்களைத் தவிர்க்க பரிந்துரைக்கும் WHO வழிகாட்டுதல்களுடன் தற்போதைய பெயர் பொருந்தவில்லை என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

WHO-ன் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் (குரங்கம்மையைச் சேர்ந்த குடும்பம்) விஞ்ஞானிகள் மிகவும் பொருத்தமான பெயர்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுவிஸ் வான்வெளி திடீர் மூடல்.. விமானங்கள் உடனடி தரையிறக்கம்.! 

இதேபோல், தரநிலைகளுக்கு எதிரான பிற நோய் பெயர்களில் பன்றிக் காய்ச்சல் (swine flu) அடங்கும். இதன் பெயரையும் மாற்ற விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.

நோய்களுக்கு பெயரிடுவது, எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும் மற்றும் கலாச்சார, சமூக, தேசிய, பிராந்திய, தொழில்முறை அல்லது இனக்குழுக்களை புண்படுத்தாமல் செய்யப்பட வேண்டும் என்று WHO பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இதையும் படிங்க: இரசாயன ஆலையில் 1,200 உக்ரேனிய குடிமக்கள் சிக்கித்தவிப்பு., ரஷ்யா தொடர் தாக்குதல் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.