ராமநாதபுரம் அருகே மது போதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தரக்குறைவாகவும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை வழி நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
தலைக்கேறிய போதையில் இருந்த அந்த ஆசாமி, தலைமைக் காவலரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், அவரை அடிப்பது போன்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மற்றொரு காவலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியில் அந்த மது போதை ஆசாமி, “வா வந்து என்னை அடித்து பார்., என்னை தூக்கி உள்ளே போடு., கொலை செய்து விடுவேன், அது எவனாயிருந்தாலும். உன் படம் எல்லாம் என்னிடம் காட்டாதே. உன்னால் என்னை என்ன செய்ய முடியும்” என அந்த காணொளியில் அவர் பேசியது பதிவாகி உள்ளது.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.