கோவை – ஷீரடி தனியார் சிறப்பு ரயில்: கட்டணம் எவ்வளவு? என்னென்ன வசதிகள்?

ரயில்கள் தனியார் மயமாக்க கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கோவையில் இருந்து ஷீரடி வரை தனியார் ரயில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி ரயில் விட வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். அந்த வகையில் தற்போது கோவை முதல் ஷீரடி வரை தனியார் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ‘பாரத் கவுர்’ என்ற திட்டத்தின் கீழ் கோவை உள்பட 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் இயக்குவதற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. கோவையில் இருந்து ஷீரடிக்கும், ஷீரடியில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலாயா வழியாக செல்வதால் அங்கு செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் வசதியாக இருக்கும். இந்த ரயில் தூய்மையாகவும் சர்வதேச தரத்தில் விருந்தோம்பலும் இருக்கும் என்றும் முதல் ரயில் 1,100 பேர் பயணம் செய்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரயில் கோவை வடக்கு பகுதியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு ஷீரடி நகரை வந்தடையும். ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் ஷீரடியில் இருந்து கோவைக்கு கிளம்பும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூர், தர்மபுரம், மந்திராலயா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.

இந்த ரயிலுக்கான கட்டணம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட் ரூ.2500, 3 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.5000, 2 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.7000, முதல் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த ரயிலில் அனுபவமுள்ள ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது என்றும் பயணிகள் பயன்படுத்தும் பகுதிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய சைவ உணவுகள் அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தனியார் ரயில் இயக்கப்படுவதற்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IRCTC flags off India’s first private train under ‘Bharat Gaurav Scheme’, departs for Shirdi

IRCTC flags off India’s first private train under ‘Bharat Gaurav Scheme’, departs for Shirdi | கோவை – ஷீரடி தனியார் சிறப்பு ரயில்: கட்டணம் எவ்வளவு? என்னென்ன வசதிகள்?

Story first published: Wednesday, June 15, 2022, 15:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.