கடந்த சில தினங்களாகவே பங்கு சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. குறிப்பாக சிமெண்ட் பங்குகளில் அதிக ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியின் உள்கட்டமைப்பு துறையில் பல்வேறு தலைவலிகள் உள்ளன. குறிப்பாக பல்வேறு மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பினை கண்டுள்ளன. இதில் சிமெண்ட் விலையும் ஒன்று.
செராமிக்ஸ், பைப்புகள், மர பொருட்கள், சிமெண்ட் மற்றும் ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்துள்ளன.
5ஜி ஸ்பெக்ட்ரம் விலை 35% குறைப்பு.. குத்தாட்டம் போடும் ஜியோ, ஏர்டெல்..!
உச்சத்தில் இருந்து சரிவு
இதற்கிடையில் உச்சத்தில் இருந்து சிமெண்ட் பங்குகள் விலையானது உச்சத்தில் இருந்து 30% சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் இதன் தேவையானது அதிகரிக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு துறையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
சிமெண்ட் பங்கு விலை அதிகரிக்கலாம்
ஸ்டீல் விலை, ஆட்களுக்கான சம்பளம் என அனைத்தும் அதிகரித்துள்ள நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் சிமெண்ட் விலையும் அதிக்கரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிமெண்ட் நிறுவனங்களின் மார்ஜினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது பங்கின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கணிப்பு
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் ஜேகே சிமெண்ட்ஸ் நிறுவனத்தினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இ-ப்பங்கின் விலையானது தற்போது 2133 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிண்றது. இதன் 52 வர குறைந்தபட்ச விலை 2045 ரூபாயாகும். இது கடந்த நவம்பர் 2021ல் தொட்டது. இதன் 52 வார உச்ச விலை 3838 ரூபாயாகும். ஆக இப்பங்கின் விலையானது அதன் 52 வார குறைந்தபட்ச விலைக்கு அருகில் காணப்படுகின்றது. தரகு நிறுவனம் இதன் இலக்கு விலையானது 3170 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 50% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பங்குகள் பரிந்துரை?
இது தவிர அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளையும் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட்டின் இலக்கு விலை 8500 ரூபாயாகவும், ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 27,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
ICICI securities recommendations on these cement stocks
Cement stocks have fallen 30% since the peak. However the need for this is expected to increase. Many new projects can be introduced in the infrastructure sector.