சிறு, குறு நிறுவனங்களுக்காக இணையதளம் | Dinamalar

சென்னை: மின்னாளுமை முகமை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு மின்னாளுமை முகமை, ‘வளர் 4.0’ என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், சேவை வழங்குனர்களின் விபரங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும். இந்த இணையதளத்தில் இதுவரை, 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.