தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். கடந்த மே 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகிய நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
அந்த பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும்போது கொண்டாடுங்கள் என்ற பாடம் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.” என்று தெரிவித்துள்ளார்.