ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ உள்பட பல வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இதனை அடுத்து வங்கிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கனவே பல வங்கிகளில் டெபாசிட் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஐடிபிஐ வங்கி இன்று முதல் டேர்ம் டெபாசிட்டுகளுக்கான புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
சாமானியர்களின் சுமை இன்னும் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஷாக்..!
ஐடிபிஐ வங்கி
குறிப்பாக ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி தருகிறது. எனவே சீனியர் சிட்டிசன்கள் உள்பட அனைவரும் ஐடிபிஐ வங்கியில் டேர்ம் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்பது குறிபிடத்தக்கது.
இன்று முதல்
இன்றுமுதல் ஐடிபிஐ வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யப்படும் டேர்ம் டெபாசிட்டுகளுக்கு உரிய வட்டி விகிதம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
புதிய வட்டி விகிதம்
7 -14 நாட்கள் : 2.70%
15 – 30 நாட்கள் : 2.70%
31-48 நாட்கள் : 3.00%
46-60 நாட்கள் – 3.25%
61-90 நாட்கள் – 3.40%
91-6 மாதங்கள் – 4.00%
6 மாதம் முதல் 270 நாட்கள் – 4.40%
271 நாட்கள் முதல் ஒரு வருடம் – 4.50%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.25%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.60%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.45%
5 ஆண்டு – 7ஆண்டு : 5.75%
7ஆண்டு – 10 ஆண்டு 5.75%
சீனியர் சிட்டிசன்கள்
மேற்கண்ட வட்டி விகிதங்களில் இருந்து சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி அள்ளி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் இதோ:
7 -14 நாட்கள் : 3.20%
15 – 30 நாட்கள் : 3.20%
31-45 நாட்கள் : 3.50%
46-60 நாட்கள் – 3.75%
61-90 நாட்கள் – 3.90%
91-6 மாதங்கள் – 4.50%
6 மாதம் முதல் 270 நாட்கள் – 4.90%
271 நாட்கள் முதல் ஒரு வருடம் – 5.00%
1 ஆண்டு – 2 ஆண்டு : 6.00%
2 ஆண்டு – 3 ஆண்டு : 6.10%
3 ஆண்டு – 5 ஆண்டு : 6.35%
5 ஆண்டு – 7ஆண்டு : 6.50%
7ஆண்டு – 10 ஆண்டு 6.50%
IDBI Bank ups retail term deposit rates by 10-25 bps
IDBI Bank ups retail term deposit rates by 10-25 bps | சீனியர் சிட்டிசன்களுக்கு அள்ளி கொடுக்கும் ஐடிபிஐ வங்கி: இன்று முதல் புதிய வட்டி விகிதம்!