70-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரைாக இருந்தவர் லட்சுமி. சிவாஜி எம்ஜிஆர் தொடங்கி தற்போது ரஜினி விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த லட்சுமி சூர்யாவுடன் வேல் படத்தில் அவரது பாட்டியாக நடித்திருந்தார்.
இவருடைய மகள் ஐஸ்வர்யா. அம்மாவை போலவே சினிமாவில் கால்பதித்த அவர், 1989-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா, மில் தொழிலாளி, தையல்கரான், ராசுகுட்டி மீரா, உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்மூலம் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வாய்ப்பு பெற்ற ஐஸ்வர்யா முன்னணி நாயகியாக வலம் வந்தார். தொடர்ந்து நாயகி வாய்ப்பு குறையவே, பழனி, எம்.குமரன், ஆறு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதிலும் ஆறு படத்தில் இவர் நடித்த சவுண்டு சரோஜா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் பெரிய திரை வாய்ப்பு குறையவெ சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ஐஸ்வர்யா, அழகு, தென்றல், உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய இவர், தனது சவுண்டு சரோஜா கேரக்டரில் என்ட்ரி கொடுத்து பல சமையல் ரெசிபிகளை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட் அளித்த ஐஸ்வர்யா, தற்போது எந்த வேலையும் இல்லாததால் மோசமான நிலையில் இருக்கிறேன் வருமானத்திற்காக எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது சோப் விற்கும் தொழில் செய்து வருகிறேன். இதில் ஏதோ வருமானம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வேலையை தான் ஜாலியாக செய்து வருவதாகவும், இப்போது தனக்கு எந்த கடனும் இல்லை எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ள ஐஸ்வர்யா தற்போது நிம்மதியாக இருப்பதாகவும், சோப்பு விற்பதை நினைத்து வருத்தப்படவில்லை என்றும், எந்த வேலை செய்தாலும் மனநிறைவுடன் செய்தால் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.