டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
விமானத்தில் உள்ள இருக்கைகளில் எண்ணிக்கையைவிட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பயணிகள் பயணம் செல்ல உரிய டிக்கெட் இருந்தாலும் பயணம் செய்ய அனுமதிக்க அனுமதி மறுக்கப்படும் நிலை ஏற்படும்.
இத்தகைய சூழல் நிலவும் போது பாதிக்கப்பட்ட பயணிக்கு 24 மணி நேரத்தில் மாற்று விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும், அவ்வாறு ஏற்பாடு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் தான் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
DGCA என்று கூறப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்தப் பிரச்னை தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் ஏர்-இந்தியா இந்த விதிகளை மீறி உள்ளதாகவும் அதனால் தான் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, தனிப்பட்ட விசாரணையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா
பயணிகளிடம் பயணம் செய்வதற்காக டிக்கெட் இருந்தாலும் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும் விஷயத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒரு நிரந்தர கொள்கை இல்லை என்றும் இது பயணிகளுக்கு மகிழ்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழுக்கள் நியமனம்
மேலும் இந்த சிக்கலை விரைவாக தீர்ப்பதற்கு உடனடியாக ஏர் இந்தியா நிறுவனம் குழுக்களை நியமனம் செய்து விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தவறும் பட்சத்தில் விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை மேலாளர் மேலும் சில நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
ஒரு பயணி தான் பயணம் செய்ய செல்லுபடியாகும் டிக்கெட்டை கையில் வைத்திருந்தும், அவர் பயணம் செய்ய மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மாற்று ஏற்பாடு அல்லது இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒரு மணி நேரம்
சம்பந்தப்பட்ட பயணிக்கு விமான நிறுவனம் ஒரு மணி நேரத்திற்குள் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தால் எந்தவித இழப்பும் அந்த பயணிக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை.
அபராத தொகை
ஆனால் அதே நேரத்தில் 24 மணி நேரத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் இழப்பீடு தொகை 10 ஆயிரம் வரை வழங்கப்பட வேண்டும் என்றும் 24 மணி நேரத்துக்கு மேலாக இருந்தால் அந்த இழப்பீடு தொகை 20 ஆயிரம் என உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Compensation norms violated: DGCA penalises Air India Rs 10 lakh for denying boarding
Compensation norms violated: DGCA penalises Air India Rs 10 lakh for denying boarding | டாடாவுக்கே அபராதமா? அப்படி என்ன தவறு செய்தது ஏர் இந்தியா?