கரூரில் தடையை மீறி இரு சக்கர வாகனப் பேரணி நடத்திய பாஜக இளைஞரணியினரை போலீசார் கைது செய்ததோடு, அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனையை விளக்க,வெண்ணைமலை முதல் கரூர் பேருந்து நிலையம் வரை பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பாஜகவினரை தடுத்தபோது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.