தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரசார் சார்பாக போராட்டம் நடத்திய, தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தால் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நடத்தி வரப்பட்டது. இதில், அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குகள் சட்ட விரோதமாக கைமாற்றப்பட்டதாக குற்றம் சட்டப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக கிடப்பில் கிடந்த நிலையில், அண்மையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இதனை தொடர்ந்து இன்றோடு முன்றாவது நாளாக ராகுல்காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ராகுல்காந்தி ஆஜராகி உள்ளார்.
இன்று ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரான போது, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்றும் போராட்டம் நடத்தினர்.
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
தொடரும் காங்கிரஸ் போராட்டம் குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்ட ஜோதிமணி எம்.பி.#Jothimani #Congress #Delhi pic.twitter.com/Xfv9H3E8Ga
— Kanchi B. Venkatesan (@Kanchivenkatesa) June 15, 2022
இதன் காரணமாக. போலீசார் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. போலீசார் தடையை மீறி செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து வேனில் ஏற்றினர்.
மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி சி.ஆர். பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி நகர போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.