வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.