சென்னையில் கொரோனா தொற்றை குறைத்தால் மற்ற பகுதிகளில் குறையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.
தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அபோது அவர் கூறியதாவது, சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் பார்த்துக்கொள்ள முடிவும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.