ரயில் நிலையம் அருகே, உணவகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட நான்கு பேர், வாந்தி மயக்கத்துடன் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு, அரச்சலூர் பகுதியை சேர்ந்த அமுதா, சந்திரன் தம்பதியினர், சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேர் வந்துள்ளனர்.
பின்னர், தங்கள் பணியை முடித்துவிட்டு ரயில் நிலையம் அருகே உள்ள கருப்பண்ணன் என்ற உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் கொத்து புரோட்டா ஆர்டர் செய்து செய்துள்ளனர். அப்போது, அந்த கொத்து புரோட்டாவுக்கு வழங்கப்பட்ட கோழிக்கறி குருமாவில் உயிரிழந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, நான்கு பேரும் உணவகத்தின் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பவே, இது கோழியின் கால், பல்லி அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.
திடீரென சிறிது நேரத்தில் அந்த உணவை அருந்திய வாந்தி 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த உணவை சாப்பிட்ட நான்கு பேரும் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.