தலைவலி உங்களை வாட்டி வதைக்குதா? இதனை சட்டென போக்க இதோ சில எளிய வைத்தியங்கள்


தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது.

நமது அன்றாட வேலைகளாலும், மன அழுத்தம் காரணமாகவும் நமக்கு உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம்.

இது நம்மை மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.

சிலருக்கு டென்ஷன் ஆனாலே தலைவலி வந்து விடும்…

இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு சில இயற்கை வழிகளே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.   

தலைவலி உங்களை வாட்டி வதைக்குதா? இதனை சட்டென போக்க இதோ சில எளிய வைத்தியங்கள்

  • கிராம்பை நன்கு அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி பின் வலியுள்ள நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும்.

    கல் உப்பிற்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் உள்ளது. மேலும் சிறிது கிராம்பு சிறிது கல் உப்பை பால் கலந்து அரைத்து சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

  • 30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து பின் அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.
  • குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும். வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்
  • பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும், பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
  • 1-2 இஞ்சியை எடுத்து கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.
  • சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும், இந்த சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரி செய்கிறது.

  • யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கு நல்ல மருந்து ஆகும், இதனைக் கொண்டு மாசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

  • தலைவலி இருக்கும் போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும். சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.

  • சந்தனத்தை சிறிது தண்ணீர் விட்டு மைபோல மென்மையாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி சரியாகும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.