திமுக அறிவித்த 517 பக்க தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கும்பகோணத்தில் பாஜக மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. பாஜகவின் சாதனைகளை விளக்கி பேசினார் மாநிலத் தலைவர் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்குவேன் என அறிவித்தார்கள். 1 ஆண்டுகளாகியும் அறிவிக்கவில்லை.
தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்ட அறிவித்தால், மத்திய அரசிடம் பேசி, ஆன்மீக மாவட்டமாக மாற்றி, 1000 கணக்கான கோடி ரூபாய், கொண்டு வரப்படும். இதனை மாடல் மாவட்டமாக மாற்ற வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் செய்யமாட்டார். திமுகவினர் அறிவிக்க வேண்டுமானால், பக்கத்திலுள்ள நிலங்களை கைப்பற்றிய பிறகு அறிவிப்பார்கள். அதில் பணம் சம்பாதிக்கலாம் என பார்ப்பார்கள். திமுக அறிவித்த 517 பக்க தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் தான் இருக்கும். எத்தனை நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழக முதல்வர் மகன் நடித்த படத்துக்கு, குருவி பிடிப்பவர்கள் போல் ஆட்களை பிடித்து கொண்டு போயுள்ளார்கள். இலங்கையில் இருந்து விரைவில் தமிழகத்துக்கு சட்டப்படி நியாமாக வரவேண்டியது வரும். 2024-ம் ஆண்டு தேர்தலில் 400 எம்பிகளுடன் ஆட்சி அமைப்போம். அதில் தமிழகத்திலிருந்து 25 பேரும், அதில் ஒருவர் தஞ்சாவூரிலிருந்து செல்ல வேண்டும். 5 பேர் அமைச்சராக வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட முடியாது, அணையை கட்ட விடமாட்டோம். மக்களை ஏமாற்றவேண்டும், அரசியல் செய்ய வேண்டும், ஊழல் தெரிந்து விடக்கூடாது, குடும்ப அரசியல் வெளியில் தெரிந்து விடக்கூடாது என செத்த பாம்பை எடுத்து, தமிழகத்தில் காவிரியை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இது தான் தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசமாகும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM