தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு தொடர்பாக காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.
புல்வாமா, குப்வாரா, சோபியான் மாவட்டங்களில் நடைபெற்ற சோதனைகளில் முஷ்தாக் பட், பையாஷ் அகமது கான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு ஆயுதங்கள் ஏற்பாடு செய்தல், இளைஞர்களை மூளைச் சலவை செய்து லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பாக செயல்படும் டிஆர்எப்பில் சேர்ப்பது போன்ற செயல்களில் இருவரும் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.