நாகை மாவட்டத்தின் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு ஒருதரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆவேசமடைந்த மற்றொரு தரப்பு மீனவர்கள், மீன்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மேல பட்டினச்சேரி மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய நிலையில், அந்த மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் தடுத்துள்ளனர்.
இதனை கண்டித்து நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் மீன்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.