நான் கருப்பாக இருக்கிறேன், குழந்தை மட்டும் எப்படி? கணவன் செய்த கொடூரம்!


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், தனது ஆறு மாத குழந்தை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆர்வக்கல்லு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பொக்குலா டீணா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நான் கருப்பாக இருக்கிறேன், ஆனால் குழந்தை மட்டும் எப்படி சிவப்பாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரங்கா முரளி, மீண்டும் குழந்தை குறித்து மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் எனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக் கூடாது எனக்கூறி , பூட்டால் குழந்தையில் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

நான் கருப்பாக இருக்கிறேன், குழந்தை மட்டும் எப்படி? கணவன் செய்த கொடூரம்!

இதில் குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் தனது மனைவியையும் அவர் கொலை செய்ய முயற்சிக்க டீணா அலறியுள்ளார்.

இதனால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் கைப்பற்றப்பட்டது. மேலும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.