பாணின் விலை 1,500 ரூபாவாக உயரும் சாத்தியம்! வரலாறு காணாத விலை உயர்வு டிசம்பருக்குள்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது போல பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்திற்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாணின் விலை 1,500 ரூபாவாக உயரும் சாத்தியம்! வரலாறு காணாத விலை உயர்வு டிசம்பருக்குள்

உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தானது 

தற்போது 100 ரூபாவில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்வது டிசம்பர் மாதத்தில் 1,790ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தான சூழ்நிலை, அதனை வளர்ச்சியடையாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும்.

அதிக பணவீக்கம் என்ற நிலைமையானது மிகவும் பயங்கரமானது. இதனால் அதிகரித்து வரும்  நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

பாணின் விலை 1,500 ரூபாவாக உயரும் சாத்தியம்! வரலாறு காணாத விலை உயர்வு டிசம்பருக்குள்

கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக இருந்ததுடன் ஏப்ரல் மாதம் 30 வீதமாக அதிகரித்தது. இந்த மாதம் 33.3 வீதமாக இருக்கின்றது.

மாதாந்தம் பணவீக்கமானது 30 வீதம் என்ற கணக்கில் அதிகரித்தால், 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பொருளின் விலை டிசம்பர் மாத்தில் 1790 ரூபாவாக அதிகரிக்கும். இது அனைத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.