பிரித்தானியா ஒரு நிலைகுலைந்த வெறித்தனத்தில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளது என விளாடிமிர் புடின் தீவிர ஆதரவாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியு:ள்ளார்.
பிரித்தானிய முன்னாள் வீரர் Jordan Gatley உக்ரைனில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரத்தை ரஷ்யா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
மேலும், ரஷ்யாவின் அரசியல் விஞ்ஞானி Vladimir Kornilov தெரிவிக்கையில், Jordan Gatley விவகாரமே, பிரித்தானியா ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளதன் ஆதாரம் தான் என்றார்.
மட்டுமின்றி, Jordan Gatley-ன் மரணத்திற்கு பின்னர் அவர் தந்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகளை தாம் வாசிக்க நேர்ந்ததாகவும் உண்மையில், அவர் நொறுங்கிப்போயுள்ளார் எனவும் Vladimir Kornilov தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் வரையில் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றிய ஒருவர், பணியில் இருந்து விலகி, தனியாக வேறு பிராந்தியத்தில் சேவை செய்ய முடிவெடுத்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் Vladimir Kornilov.
இதில் இருந்து புரிந்து கொள்ளலாம், அவர் பிரித்தானிய இராணுவத்தில் இருந்து விலகவில்லை, குறிப்பிட்ட பொறுப்புகளில் இருந்து தான் விலகியுள்ளார் என Vladimir Kornilov தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரித்தா வெளிவிவகாரத்துறை தெரிவிக்கையில், உக்ரைனில் ரஷ்ய துருப்புகளால் கொல்லப்பட்ட பிரித்தானிய வீரர் தொடர்பில் அனைத்து உதவிகளும் அவரது குடும்பத்தினருக்கு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் Jordan Gatley களமிறங்கியது அவரது தனிப்பட்ட முடிவு எனவும், ஒரு தன்னார்வலராகவே அவர் உக்ரைனில் களமிறங்கினார் எனவும் பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா அளித்த விளக்கங்களை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள Vladimir Kornilov உண்மையில் Jordan Gatley பிரித்தானிய கூலிப்படை என்பது உறுதியாகியுள்ளது என்றார்.