பிறந்த குழந்தைகளுக்கும் இனி ஆதார்.. ஏன் தெரியுமா?

பிறப்பு, இறப்பு தரவுகளை இணைக்க UIDAI திட்டமிட்டுள்ளதால், புதியதாக பிறந்த குழந்தைகளுக்கும் தற்காலிகமாக ஆதார் கார்டினை பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டமானது குழந்தை பிறப்பில் இருந்தே அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொள்ளுவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் மூலம் தவறுகள் நடப்பதையும் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

அமெரிக்கா எடுக்க போகும் ஒற்றை முடிவு.. இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்?

பிறந்த குழந்தைக்கும் ஆதார்

பிறந்த குழந்தைக்கும் ஆதார்

ஆக இந்த திட்டத்தின் மூலம் இனி பிறந்த குழந்தைகள் கூட ஆதார் நம்பரை பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். அதன் பின்னர் இது பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைக்கப்பட்டு புதுபிக்கப்படலாம். இதன் மூலம் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கும், பிறந்தது முதல் கொண்டு அரசு சலுகைகளையும் பெறுவதை நோக்கமாக கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு பதிவிலும் ஆதார் கட்டாயமா?

இறப்பு பதிவிலும் ஆதார் கட்டாயமா?

மேலும் விரைவில் இறப்பு பதிவுகளையும் ஆதாருடன் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தை பிறந்த உடன் UIDAI ஆதார் நம்பரை ஒதுக்குவது, அரசு திட்டங்களில் இருந்து குழந்தைகளும், அவர்களது குடும்பமும் பயனடைவதை உறுதி செய்யும். மேலும் சமூக பாதுகாப்பு வலையில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள் என்றும் ETல் வெளியான தகவல்கள் கூறுகின்றன.

5வயதிற்கு பிறகு பயோ மெட்ரிக்
 

5வயதிற்கு பிறகு பயோ மெட்ரிக்

பிறந்த உடன் ஆதார் கார்டினை பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், குழந்தையின் 5 வயதிற்கு பிறகே பயோமெட்ரிக் தரவு எடுக்கப்படுகின்றது. ஆக குழந்தையின் 5 வயதிற்கு பிறகு குழந்தையில் பயோமெட்ரிக் தரவானது எடுக்கப்படுகின்றது. அப்படி எடுத்த பின்னரே நிரந்தரமாக ஆதார் அப்டேட் செய்யப்படுகின்றது.

அதேபோல அந்த குழந்தைக்கு 18 வயதாகும்போது மீண்டும் பயோமெட்ரிக் முறையானது அப்டேட் செய்யப்படும்.

இறப்புகளை கணிக்க திட்டம்

இறப்புகளை கணிக்க திட்டம்

UIDAI நகரம் மற்றும் மாநில தரவுகளை பயன்படுத்தி இறப்புகளை கண்கானிக்கும். மேலும் பொய்யான தரவுகளை அகற்ற தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளையும் அணுக இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக அரசின் பல சலுகைகளையும் இறந்தவர்கள் பெயரில் மோசடி செய்து மற்றவர்கள் பலன் பெறுவதை குறைக்கும்.

மோசடிகளை தடுக்க நடவடிக்கை

மோசடிகளை தடுக்க நடவடிக்கை

கொரோனாவின் வருகைக்கு பிறகு இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது சமீபத்தில் இறந்தவர்களின் பெயரில் ஓய்வூதியம் இன்னும் பெறப்படுகின்றது. ஆதார் கார்டுகள் செயலில் இருப்பதால் தானாகவே அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இது ஏற்க முடியாத ஒன்று. ஆக இதுபோன்ற பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவே அரசு இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

போலியை அகற்ற திட்டம்

போலியை அகற்ற திட்டம்

UIDA-ல் மற்றொரு திட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது. இது போலியானதை(duplicates ) அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆக அதன் ஒரு பகுதியாக டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான் எண் உள்ளிட்ட பல ஆவணங்களுடன் குறுக்கு சோதனை செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UIDAI Plans to issue Aadhaar number to newborns: Do you know why?

As UIDAI plans to link birth and death data, it is expected that newborns will also be able to access the Aadhaar card temporarily.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.