ஐதராபாத்: ராணா, சாய்பல்லவி நடித்த விராட பருவம் என்ற தெலுங்கு படம் நாளை வெளிவருகிறது. இதில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் சாய்பல்லவி. படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் சாய்பல்லவியிடம் மதம் குறித்து கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ராம் என சொல்லச்சொல்லி தாக்குதல் நடத்தி கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே மிகவும் தவறான செயல். மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது என்று கூறியிருக்கிறார். சாய்பல்லவியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணைய தளத்தில் பல்வேறு தரப்பினர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.