பாலக்காடு: ”மத அடிப்படை வாதிகளுக்கு கேரள அரசு ‘குடை’ பிடிக்கிறது” என கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் பேசினார்.
கேரள மாநிலம் பா.ஜ., சார்பில் ‘மத்திய அரசின் திட்ட நுகர்வோர் சங்கமம்’ நிகழ்ச்சி நேற்று மாலை பாலக்காட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் பேசியதாவது: கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், டில்லி போன்ற மாநில அரசுகள் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. மத்தியில் பா.ஜ., அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி தங்களின் திட்டம் போல சித்தரிக்கின்றனர்.
மத்திய அரசின் நிதியை, மாநில அரசு தங்கள் இஷ்டம் போல் செலவழிப்பதால் மத்திய அரசின் திட்டப்பலன்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை.பிரதமர் மோடியின் திட்டங்கள் ஒவ்வொரு மாநில அரசும் முறையாக செயல்படுத்தினால், பொது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.மத அடிப்படைவாதிகளுக்கு ‘குடை’ பிடித்து அதிகாரம் நிலைநாட்ட முதல்வர். பினராயி விஜயன் அரசு முயற்சிக்கின்றது. இதை கேரள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுரேந்திரன் பேசினார்.இக்கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார், உன்னி கிருஷ்ணன், நகராட்சி தலைவி பிரியா விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement