மாட்டு கொட்டகையில் விளையாடிய சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் இருக்கும் பண்ணையில் அறிவழகன் என்பவரது குடும்பத்தினர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இவருக்கு இவருக்கு 5 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் தனலட்சுமி(வயது 6) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாட்டுக் கொட்டகையில் தனலட்சுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தென்னை மட்டையை சிறுமி எடுத்தபோது அதில் இருந்த பாம்பு தனலட்சுமியை கடித்தது.
இதனால் தனலட்சுமியின் குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.