மூவி புரொமோஷனுக்காக சீரியலில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அபர்ணா
சினிமா நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு தொலைக்காட்சி நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். இதன் காரணமாக சமீப காலங்களில் சினிமா நடிகர்கள் தங்கள் படத்தின் புரொமோஷனை, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு செய்து வருகின்றனர். விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்கள் படத்தினை புரொமோட் செய்ததை பார்த்திருப்போம்.
அந்த வகையில் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக சீரியலில் ஒரு மூவி புரொமோஷன் நடைபெற்றுள்ளது. ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'வீட்ல விசேஷங்க'. இந்த படத்தின் புரொமோஷனை ஜீ தமிழ் டிவியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
350-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் கதையில் எந்த குழப்பமும் வராமலும் சீரியல் விறுவிறுப்பை மேலும் கூட்டும் வகையிலும் படக்குழுவினர் இந்த சீரியலில் இணைந்து நடித்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இந்த புது முயற்சி இனி வரும் காலங்களில் டிரெண்ட்டாக மாறலாம்.