சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை அரசியல் ஆதாயத்துக்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. 4.75 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக என்ற போர்வையில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட கர்நாடகா முயற்சிப்பது ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார்.