ரஷ்யாவின் கடல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாவும், சீனாவும் 50 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஆய்வில் ரஷ்யா ஒரு நாளைக்கு 3.55 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்வதாகவும், அதில் 50 சதவீதம் இந்தியா மற்றும் சீனாவுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடனான போர் தொடங்கும் முன்பு ரஷ்யாவில் இருந்து 1 சதவீதம் மட்டுமே இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே மாத கணக்கின்படி ஈராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது.