இந்தியாவின் வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூபாய் 2000 கோடி திரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் 100%க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் 2,000 கோடி நிதி திரட்டும் இலக்கை அந்நிறுவனம் நிச்சயம் வெற்றிகரமான அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மாற்ற இயலாத கடன் பத்திரங்களை தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்து நிதி திரட்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ.2000 கோடி
இந்த திட்டத்தின் மூலம் 2,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் பணியாளர் பங்கு உரிமை திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
பங்குகளின் எண்ணிக்கை
மேலும் ESOP திட்டத்தின் கீழ் நிதி திரட்டும் விருப்பங்களின் எண்ணிக்கை 20,00,000 மேல் இருக்கக்கூடாது என்றும், அவை சம எண்ணிக்கையிலான பங்குகளாக இருக்க வேண்டும் என்பதில் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் உறுதியாக உள்ளது. RSU கீழ், வெளியிடப்படும் அதிகபட்ச பங்கு அலகுகளின் எண்ணிக்கை 8,50,000 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்றும், இது சமமான பங்குகளாக மாற்றப்படும் என்று PNB ஹவுசிங் தெரிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்கள்
இந்தியாவில் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களை பொறுத்தவரை எச்டிஎஃப்சி வங்கி அதிக அளவு ஹவுசிங் பைனான்ஸ் குறைந்த வட்டியில் வழங்கிவருகிறது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி, எல்ஐசி உள்பட பல நிறுவனங்கள் ஹவுசிங் பைனான்ஸ் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையான நிறுவனம்
போட்டிகள் நிறைந்த ஹவுசிங் பைனான்ஸ் துறையில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக லாபத்துடன் செயல்பட்டு வருவதால், இந்நிறுவனம் பொது மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக கருதப்பட்டு வருகிறது.
வளர்ச்சி
பங்குச் சந்தை வல்லுனர்கள் இந்நிறுவனம் குறித்து கூறிய போது பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ள 2,000 கோடி நிதியை வெகு எளிதாக திரட்டிவிடும் என்றும், அதன்பிறகு இந்நிறுவனம் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.
PNB Housing Finance to raise up to Rs 2,000 Crore via bonds
PNB Housing Finance to raise up to Rs 2,000 Crore via bondsPNB Housing Finance to raise up to Rs 2,000 Crore via bonds | ரூ.2000 கோடி முதலீட்டை திரட்டுகிறது பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ்: எப்படி தெரியுமா?