உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து, வல்லரசு நாடுகள் ரெசிஷன் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் வேளையில் ஐடி துறை நிறுவனங்கள் பெரும் அச்சத்தில் உள்ளது.
டாட் காம் பபுள், 2008 ஆம் ஆண்டில் வந்த நிதி நெருக்கடி ஆகியவை பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஐடி பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவது பெரும் அச்சத்தை ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கு ஏற்படுத்தியது.
ஆனால் இப்போதைய சந்தை ஆய்வுகள் படி ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பும் இல்லை என்றும், குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.
தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. இன்று என்ன நிலவரம் தெரியுமா?
ரெசிஷன் பயம்
ரெசிஷன் பயத்தால் ஐடி மற்றும் டெக் பங்குகள் 2022ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதல் இந்திய முதலீட்டாளர்கள் வரையில் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஐடி சேவை
உலகளவில் அனைத்து நாடுகளும் தற்போது ஐடி சேவைகளுக்காக அதிகளவில் செலவு செய்து வரும் நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த மந்தமான மற்றும் அதிகப்படியான மாற்றத்தை எதிர்கொண்டு வரும் சந்தையில் பாதுகாப்பாகவே உள்ளது எனக் கோடாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் தெரிவித்துள்ளது.
சப்ளை செயின் மற்றும் ரீடைல் துறை
உலக நாடுகளில் உருவாகக் காத்திருக்கும் ரெசிஷன் மூலம் அதிகம் பாதிக்கப்படப்போவது ஐடி துறையோ அல்லது நிதியியல் சேவை துறையோ இல்லை, சப்ளை செயின் மற்றும் ரீடைல் துறை தான். மேலும் இந்த ரெசிஷன் பாதிப்பு என்பது விரைவில் மாறக்கூடியதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிற
நிதியியல் சேவை துறை
மேலும் ஐடி சேவைக்காகவும், டிஜிட்டல் சேவைக்காகவும் தற்போது அதிகம் முதலீடு செய்வது நிதியியல் சேவை துறை நிறுவனங்கள் தான். இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான வாடிக்கையாளர்களை நிதித்துறையில் இருந்து தான் வைத்துள்ளது.
பெரும் தொகை
ரெசிஷன் வந்தால் ஐடி சேவை மேம்பாட்டுக்கான பெரும் தொகையை முதலீடு செய்யப்பட்டு உள்ள திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படலாம், ஆனால் இயங்கி வரும் வங்கிகளின் திட்டங்களை நிறுத்த வைக்க முடியாத, முடிந்த விரைவில் ஒத்திவைத்து செலவுகளைத் தற்காலிகமாகக் குறைக்க முடியும்.
புதிய வேலைவாய்ப்புகள்
இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்பு இல்லை, மேலும் பாதிப்பு என்றால் அதிகப்படியாகப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் எண்ணிக்கை குறையும், இல்லையெனில் செலவுகளைக் குறைக்கும் பணிகள் நடக்கும்.
TCS, Infosys, HCL, wipro will be safe in recession fear
TCS, Infosys, HCL, wipro will be safe in recession fear ரெசிஷனுக்குப் பயப்படாத இந்திய ஐடி நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!