சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வழக்கமான சோதனைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் ஒய்வெடுத்து வருகிறார். அவருக்கு பதிலாக கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மைத்துனர் சுதீப் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.