குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது, இன்னும் நிறைவேற்றப்படவில்லை என பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய, தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்திர ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.