இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியர்கள் மீதான விசா தடையை சீனா நீக்கியது.
இந்தியாவுக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் உள்ள பணிகளை தொடர 2 ஆண்டுகளுக்கு பின் இந்திய தொழில் வல்லுநர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு விசா வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் சுற்றுலா மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக விசா வழங்கும் நடைமுறை தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.