நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் தற்போது இணைய வசதியை அனுபவித்து வருகின்றனர். 4ஜி சேவை வழங்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், 5ஜி சேவைக்கான சோதனைகள் நடந்து வருகிறது. இச்சூழலில், ஒன்றிய அரசு 5ஜி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 72,097.85Mhz மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றை அரசு ஏலம் விட தீர்மானித்துள்ளது. மேலும், இந்த ஏலத்தை ஜூலை 2022-க்குள் முடிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்டமிடல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Nothing Phone 1: நம்ம தமிழ்நாட்டில் தயாராகும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்!
இணைய வேகத்தின் தேவை
ஒருவேளை விரைவில் பயனர்களுக்கு 5ஜி சேவை வழங்கப்பட்டால், 4ஜி இணைய வேகத்தை விட 10 மடங்கு அதிகமாக 5ஜி இணையத்தின் வேகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்கால மக்களுக்குக்கு கொஞ்சம் கூட பொறுமை இருப்பதில்லை. முன்பு மக்கள் 2ஜி சேவையைப் பயன்படுத்தி வந்தனர். இணைய வேகம் இதில் மிகக்குறைவாக இருக்கும். அதன்பின்னர் 3ஜி, 4ஜி சேவைகள் கொண்டுவரப்பட்டது.
Xiaomi: சியோமி போன்களின் பேட்டரியை வெறும் ரூ.499க்கு மாற்றலாம்!
எனினும், தற்போது இணையத்தின் வேகம் கணிசமாக உயர்ந்தாலும், பயனர்களுக்கு வேகம் போதாதது கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த வீடியோவும் ஒரு விநாடி கூட லோடிங் ஆவதை அவர்கள் விரும்புவதில்லை. சூழல் இப்படி இருக்கும் போது, அரசின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
என்னென்ன மாற்றங்கள் நிகழும்
இந்தியாவில் 5ஜி நிறுவப்பட்டால், பல விஷயங்கள் மாறும். டிஜிட்டல் துறை வேகமான வளர்ச்சியைப் பெறும். பரிவர்த்தனைகள், டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் எளிதாக நடக்கும்.
JioPhone: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி… ஜியோ போன் ரீசார்ஜ் விலை உயர்வு!
மக்களுக்கான சேவைகள் விரைவில் அவர்களை வந்து சேரும். அதுமட்டும் இல்லாமல், தொழில்நுட்ப கட்டுமானங்கள், அதன் வளர்ச்சி என்பது அபரிமிதமாக இருக்கும். இதன் வாயிலாக அதிகபடியான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
எப்போது செயல்பாட்டுக்கு வரும்
உள்நாட்டு 5G சேவை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நாட்டில் தொடங்கப்படும் என்றும் 5ஜி மூலம் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
5ஜி சேவை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பயனர்களுக்கு முதற்கட்டமாக சேவை வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகியன 5ஜி சேவையை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இந்த சோதனைகள் 8 முக்கிய நகரங்களில் நடந்துவருகிறது.