அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியானது. அதன்படி, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் ஒற்றை தலைமை தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022